கமலுக்கு வயது60!
நம்பவே முடியவில்லை.
இப்போது நினைத்தாலும் சிரிப்பும் வருகிறது.
அந்தக் காலத்தில் கமல ஹாசன் மீது இருந்த டீன் ஏஜ் கிரேஸ்.
யாழ்ப்பாணத்தில், கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் மத்தியில் இருக்கும். கொஞ்சம் தமிழர்களின் நிம்மதியான காலம்.
எப்போதுமே MGR, சிவாஜி முகங்களை திரையில் பார்க்கும் அலுப்பு.
அதுவும் வயதில் முதிர்ந்தவர்கள் இளவயது நடிகைகளுடன் நெருங்கி நடிக்கும் காலகட்டம்.
Dull!
அங்காங்கே பொங்கலுக்கு பயற்றம் பருப்பை சேர்த்தால் போல் முத்துராமன், ஜெய்சங்கர் படங்கள்.
இதே நேரத்தில் ரசிகர்களிடையேயும் மாற்றம். நடிகர்களுக்காக படம் பார்க்காமல் இயகுநர்களுக்காக படம் ஓடத்தொடங்கிய நாட்கள். இதில் முதலிடம் பெற்றவர்கள் ஸ்ரீதர், கே. பாலசந்தர் போன்றோர்.
இந் நேரத்தில் தமிழ் திரையுலகில் ஓர் புதுமுகம்.
மிகவும் இளையவர்.
சிறு வேடங்களில் பலபடங்களில் தலை காட்டியவர்.
இளவயது பெண் ரசிகர்களுக்கிடயே பிரபலமாகிக் கொண்டிருந்தவர்.
யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக எனக்கு பார்க்க கிடைத்த அவருடைய படம்: அவள்-ஒரு-தொடர்கதை.
விகடகவியாக காந்திக் கண்ணாடியுடன் நடித்த பாத்திரம்.
இப்படம் 75 – 76 களில் யாழ்-டவுன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு பக்கக்தில் உள்ள ராணி தியேட்டரில் ஓடிய நினைவு.
தியேட்டருக்கு முன் நடிகை சுஜாதாவின் மிகவும் பிரமாண்டமான கட்-அவுட் (wooden cut-out) அலங்காரம்.
சனிக்கிழமை மட்னீ ஷோ (matinee show) – சாம் மாஸ்டரின் கெமிஸ்ரி டியூஷன் கிளாஸ் முடித்து, (Sam Master’s Chemistry tuition class) சொந்தங்களுடன் சுண்டிக்குளியில் இருந்து பஸ் பிடித்து போய்…