பாட்டானவன்

RIP  T. M Soundararajan. A playback legend who has sung more than 10,000 songs for the Tamil fans. Will be remembered forever and not be forgotten.

நாலு வரி நோட்டு

நேற்றோடு (25-மே-2013) ஒரு வீணையின் நரம்பு அறுந்தது!
ஒரு புல்லாங்குழலின் இசைத்துளைகள் மூச்சு விட மறந்தன!
மேளம் ஒன்று தாளங்களை எல்லாம் மறந்து பாளமானது!
தமிழ்நாட்டின் பிதாமக இசைக்குயில் ஒன்றின் குரல் நின்று போனது!

ம்ம்ம். ஆர்மோனியத்தின் காற்றுப் பைகளுக்கும் மூச்சுத்திணறல் வருமென்று யாருக்குத் தெரியும்!

ஆம். ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் இன்று நம்மோடு இல்லை. அவர் வணங்கிப் பாடிய தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் திருவடியில் அவர் ஆன்மா அமைதியை அடைந்திருக்கும்.

ஆனால் அவர் குரலால் உயிர் பெற்ற பாடல்கள் நம்மோடு இன்றும் ஊடாடிக் கொண்டு இருக்கின்றன.

அவர் பாடிய சில பாடல்களைக் கொஞ்சமேனும் நினைத்துப் பார்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் சிறப்பான அஞ்சலியாகும்.

எத்தனையோ கவிஞர்கள் எழுதிய பாடல்களை அவர் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார். அவையெல்லாம் திரைப்படப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான பாடல்கள். ஆனாலும் சில கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகள் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். அப்படியான சில பாடல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாட்டும் நானே பாவமும் நானே” என்ற கா.மு.ஷெரீப்பின் வரிகளைப் பாடச் சிறந்த பாடகர் வேறு யாராக இருக்க முடியும்?! திருவிளையாடல் திரைப்படத்தில் மதுரையின் தலைவன் சொக்கநாதனுக்கு மதுரை தந்த சௌந்தரராஜன் பாடியது மிகப் பொருத்தம்.

அந்தப் பாடலின் அடுத்தடுத்து வரும் இன்னொரு வரியும் மிகப் பொருத்தம். “அசையும் பொருளில் இசையும் நானே”. உண்மைதான். திரையில் அசையும் பொருளில் (நடிகர்களின் பிம்பம்) இசையாக இருந்தது…

View original post 395 more words

3 thoughts on “பாட்டானவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s